கடும் சுகாதார சீர் கேடு வழிந்தோடும் கழிவு நீரால் மூச்சடைப்பதாக பொதுமக்கள் அதிருப்தி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 June 2024

கடும் சுகாதார சீர் கேடு வழிந்தோடும் கழிவு நீரால் மூச்சடைப்பதாக பொதுமக்கள் அதிருப்தி



நீலகிரி மாவட்டம் ஊட்டி.நகராட்சியில் பல பகுதிகளில் கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுவது தொடர்கதையாகி உள்ளது 


ஊட்டியின் மையப்பகுதியான கமர்சியல் சாலையில் உள்ள  பிரபலமான உணவகங்களில் பின்புறத்தில் அமைந்திருக்கும் குடியிருப்புகளுக்கு செல்லும்  நடைபாதை மீது மூன்று மாதங்களாக கழிவு நீர் ஆறாக ஓடிக்கொண்டிருக்கின்றது. 



அப்பகுதியில் வசிப்பவர்கள் பல முயற்சிகள் எடுத்தும் இன்று வரை நகராட்சி கண்டு கொள்வதில்லை என்பதில் மிக்க வருத்தமும் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர்


அந்த நடைபாதை வழியாக செல்லும் பாதசாரிகள் மிக்க சிரமத்துக்கு ஆளாகின்றார்கள் மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் தன் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது


நோய் பருவம் அபாயத்தில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளன. தங்களை இந்த சூழ்நிலையில் இருந்து பாதுகாக்க  யாருமே இல்லையா என்ற ஏக்க கேள்வியுடன்  தினம்  தோறும் ஆரோக்கியத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த  பகுதி மக்களின் துயரத்தை யார் போக்குவர்.?


 சம்பந்தப்பட்ட நிர்வாகம் மக்களின் நலன் மீது அக்கறை செலுத்தி மூன்று மாதங்களாக நடைபாதை மீது ஓடிக் கொண்டிருக்கும் கழிவு நீரை நிறுத்தி அப்பகுதியை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம்  என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 


தமிழக குரல் இணையதளம் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து  மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad