கோத்தகிரி கிரீன் வேலியில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு கருத்தரங்கு . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

கோத்தகிரி கிரீன் வேலியில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு கருத்தரங்கு .


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோத்தகிரி அருகே உள்ள கிரீன் வேலி பள்ளியில் கருத்தரங்கு மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.  


லாங்வுட் சோலை பாதுகாப்பு  குழு சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு 

கிரீன்வேலி பள்ளியின் முதல்வர் திரு.பொன்னையா அவர்கள் தலைமை தாங்கினார். கோத்தகிரி (சிறப்பு நிலை)  பேரூராட்சி தலைவர். திருமதி. ஜெயக்குமாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். லாவ்வுட்சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் திரு. கே. ஜே. ராஜு (NTC) அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசும்போது கூறிய கருத்துக்களான இந்த உலகம் நமது பூமி நமது எதிர்காலம் என்ற தலைப்பில் பூமி பாலைவனம் ஆவதை தடுப்பது , நீராதாரங்களை பாதுகாப்பது, காடுகள் வளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.கேர் அறக்கட்டளை இயக்குனர் திரு.வினோபா, சென்னை கிரிஸ்துவக் கல்லூரி கிளையான சமுதாய கல்லூரியின் முதல்வர்  திரு.லெனின் தலைமையாசிரியர் திரு.நஞ்சுண்டன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் . முன்னதாக திரு.சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளிக்குழந்தைகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad