ஒரே மரத்தில் 20 க்கும் மேற்பட்ட தேன் கூடுகள் சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

ஒரே மரத்தில் 20 க்கும் மேற்பட்ட தேன் கூடுகள் சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு



நீலகிரி மாவட்டம்  முதுமலை கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேனீக்கள் சீசன் துவங்கி உள்ளது. வனங்களில் உள்ள பாறைகள் மரங்களில் தேன் கூடுகள் அதிகரித்துள்ளன இவற்றில் பழங்குடியின மக்கள் தேன் சேகரித்து விற்பனை செய்கின்றனர் தேனில் அதிக மருத்துவ குணம் உள்ளதால் மக்களிடம் வரவேற்பு உள்ளது


. அடர்ந்த வனப் பகுதிகளில் மட்டுமே இருக்கும் தேன் கூடுகள் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  சில மரங்களில் அருகில் உள்ளன ஒரே மரத்தில் 20 க்கும் மேற்பட்ட தேன் கூடுகள் சுற்றுலா பயணிகளை வீட்டில் ஆழ்த்தியுள்ளது தேனீக்கள் சீசன் ஆன மே ஜூன் மாதங்களில் எடுக்கப்படும் தேன் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது பதப்படுத்தப்பட்ட தேனை ஐந்து ஆண்டுகள் வரை வைத்து பயன்படுத்தலாம். இந்த சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ஆகஸ்ட் செப்டம்பரில் துவங்க உள்ளது தேன்கூடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தேனீக்கள் தாக்கம் அபாயம் உள்ளது எனவே பகுதியில் கவனமாக நடந்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad