நீலகிரி மலை ரயில் 125 ஆண்டுகள் குன்னூரில் கொண்டாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

நீலகிரி மலை ரயில் 125 ஆண்டுகள் குன்னூரில் கொண்டாட்டம்.


  

நீலகிரி மாவட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மலை இரயில் போக்குவரத்து தொடங்கியது.



1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் இந்த மலை ரயில் சேவை தொடர்ந்தது. உதகை வரையிலும் ரயில் நீட்டிக்கப்பட்டது. பல கட்ட சவால்களை தாண்டி நூற்றாண்டுகளை கடந்து யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று இன்று 125 ஆம் ஆண்டை முன்னிட்டு குன்னூர் ரயில் நிலையம் வந்த மலைரயிலுக்கு பலத்த வரவேற்ப்பு வழங்கப்பட்டது.

நீலகிரி மலை ரயில் பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் திரு. நடராஜன் அவர்களும் ,  கோவை முதன்மை இரயில்வே அதிகாரி திரு. அனுராத் தாகூர் அவர்களும் கேக் வெட்டி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினார்கள்.குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.


நீலகிரி மலைரயிலின் 125 ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் லோகோ பணிமனை ஊழியர்கள், இரயில்வே உயரதிகாரிகள், சுற்றுலா பயணிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad