டாக்டர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாளில் அவரது நல்லாட்சியும் சாதனைகளையும் நினைவு கூறுவோம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

டாக்டர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாளில் அவரது நல்லாட்சியும் சாதனைகளையும் நினைவு கூறுவோம்...

 

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, ஜூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.


 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகஸ்ட் 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர் ஒடுக்கப்பட்டவர்கள்க்கு ஆக ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை  பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் பழம்பெறும் தலைவரும் தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு இந் நன்னாளில் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் அவரது 101 வது பிறந்த நாளில் அவரது நல்லாட்சியும் அவரது சாதனைகளையும் நினைவு கூறுவோம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad