நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் தென்னிந்தியாவில் உயரமான சிகரம் என்று பிரசித்தி பெற்றது. இந் நிலையில் மே மாதத்தில் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்திற்கு வந்து காட்சி முனைகளை கண்டு ரசிக்கிறார்கள். இவ் வழித்தடத்தில் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனைச் சாவடிகளில் வாகன நெரிசலால் பல மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்கள் செல்வதால் சுற்றுலாப் பணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே வனத்துறையினர் பாஸ்ட் டேக் முறையை உபயோகிக்கிறார்கள். வனத்துறையின் சோதனை சாவடி மாற்றி அமைப்பதற்காக பணி நடைபெறுவதால் , நாளை 16- 5 -2024 முதல் 7 நாட்களுக்கு தொடர்ந்து தொட்டபெட்டா காட்சி முனை தற்காலிகமாக மூடப்படும் என்று வனத்துறை சார்பாக அறிவித்துள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் புகைப்படக் கலைஞர் என் வினோத் குமார்.
No comments:
Post a Comment