மே 18,19,20 நீலகிரிக்கு வரவேண்டாம் கலெக்டர் உத்தரவு.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு மூன்று நாட்கள் அதிகனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
ஆகவே இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மே 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா. இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment