பந்தலூர் உப்பட்டி பகுதியில் உள்ள அப்துல் கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பாக எம். எஸ். எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா.
நீலகிரி மாவட்ட அப்துல் கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பாக எம். எஸ். எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி விஷ்ணுபிரியா அவர்களுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி பந்தலூரில் முதலிடம் பிடித்த மாணவி இலக்கியா அவர்களுக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி உப்பட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கவிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். பள்ளியின் தாளாளர் ஆலி மற்றும் ஷாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் பாரி ஆக்ரோ நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் மெயின்டன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பாராட்டுதல் நடைபெற்று பதக்கம் கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ருக்குமணி நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment