சேரங்கோடு பஜாரில் உள்ள அன்னை வேளாங்கன்னி மாத கோவிலின் வருடாந்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது வெளிநாட்டவரும் கலந்து கொண்டு அசத்தல்...
சேரங்கோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பல ஆண்டுக்கு முன் மாத என்ற புனித தெய்வம் இந்த சேரங்கோடு பகுதிக்கு வந்து இங்கு உள்ள குளத்தில் நீர் பருகி சென்றதாக கூறப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க இந்த இடத்தில் சிறு கோவிலை கட்டி வளி பட்டு வந்தனர். இந்த கோவிலில் பல்வேறு ஆச்சிரியங்கள் நடைபெற்றது இங்கு அன்னை வேளாங்கன்னியின் அற்புதத்தை கண்ட சிலர் இங்கு அதிகளவு பொது மக்கள் வந்து வளி பட்டுச் சென்றனர் பின்பு நாளடைவில் அதிக மக்கள் வரத் தொடங்கினர் .
இதனைத் தொடர்ந்து இந்த ஆலையத்தின் பணி உயரத் தொடங்கியது நாளடைவில் மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரத்தொடங்கினர்.
இங்கு ஆண்டுத் திருவிழா மிக சிறப்பாக தொடங்கியது ஆடல் பாடல் திரைப்படம் என கோலாகாலமாக கொண்டாடப்பட்டது.
இந்த கோவிலின் அறுமை பெருமையை பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மேலம் திருவிழா காலங்களில் கேரளா கர்நாடக.வெளி நாடுஙளிலிருந்தும் வரத்தொடங்கினர்.
இன்னிலையில் இன்றைய தினம் சேரங்கோடு அன்னை வேளாங்கன்னி மாதாவின்
வருடாந்திர திருவிழா மிக சிறப்பான முறையில் பங்கு தந்தை அருட்பணி.ஜான்சன் தலைமையில் நடைபெற்றது.இதில் ஏராளமான இறை பக்தர்கள் குடும்பமாக கலந்துக்கொண்டு இறையாசீர் பெற்றனர். விழாவ் ஐநூறுக்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர் இவர்கள் அனை வருக்கும் அறுசுவை உணவு ஆலயத்தில் வழங்கப்பட்டது..
இந்த திருவிழாவில் கப்பல் போன்ற அமைப்பில் வடிவமைத்து மின் ஒளி விழக்குகளால் அழங்கரிக்கப்பட்டட தேர் ஆலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய கிராம வீதி வழியாக சேரங்கோடு பஜார் சென்று தேர் பவனி மீண்டும் கோவிலை வந்தடைந்தது .அதன் பின் வான வேடிக்கை நிகழ்ந்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment