கோத்தகிரி - உதகை செல்லும் சாலையில் ராட்சச மரம் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 4 May 2024

கோத்தகிரி - உதகை செல்லும் சாலையில் ராட்சச மரம் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு...



கோத்தகிரி - உதகை சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதால் தினதோறும் வாகன நெருக்கடிகளால் ஆங்காங்கே வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது இந்நிலையில் வாகனத்தினால் மட்டும் நெரிசல் வராது இயற்கையான என்னாலும் வரும் என்று இயற்கையின் கோர தாண்டவத்திற்கு ஒரு ராட்சசமரம் சாய்ந்தது இதனால் அங்கு வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் இருபுறத்திலும் வரிசையில் நிற்கப்பட்டன




இந்த நிலையில் அங்கு வந்த இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிற்கப்பட்டதால் சற்று நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது இந்நிலையில் அங்கு உடனடியாக ஒவ்வொரு தேவையான உபகரணங்களோடு வருகை புரிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலரான திரு பிரேம் ஆனந்த் அவர்களது தலைமையிலான குழுவினர் அதிரடியாக தங்களது பணிகளை மேற்கொண்டு அந்த ராட்சச மரத்தை அறுத்து சாலை ஓரத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களின் உதவிகளுடன் அப்புறப்படுத்தினர்




 இதனால் அந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டன இதனால் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும் அங்கிருந்து மீட்பு குழுவினருக்கும் வாகன ஒட்டிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் 


உடனடியாக களத்தில் இறங்கி விரைவாக பணிய முடிக்க உதவிய உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் திரு பிரேம் ஆனந்த் அவர்கள் தலைமையிலான குழுவினருக்கும் மீட்பு குழுவினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...  



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad