கோத்தகிரியில் செங்குளவி கடித்து 2 பேர் பலி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 4 May 2024

கோத்தகிரியில் செங்குளவி கடித்து 2 பேர் பலி.

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற கோயம்புத்தூரை சேர்ந்த சுற்றுலாபயணிகளை செங்குளவி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆடத்தொரை  பகுதிக்கு கோயம்புத்தூர் சித்தாபுதூர் பகுதியில் இருந்து 9 பேர் சேர்ந்த 3 குடும்பங்கள் இன்ப சுற்றுலா வந்திருந்தனர்.




 இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற பொழுது செங்குளவி அவர்களை தாக்க துவங்கியது இதில் குளவி கடித்ததில் அனைவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் பொழுது கார்த்திகேயன் (56 )மற்றும் ராஜசேகரன் (56 )ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மற்றவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .சுற்றுலா வந்த இடத்தில் செங்குளவி கடித்து இருவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ஆபத்தான நிலையில் உள்ள ரவி கண்ணன் (56) என்பவரை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad