நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் ஃபேமிலி ஆஃப்பேர் எனும் சிங்கப்பூரை சார்ந்த தன்னார்வ அமைப்பு கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் 16ஆம் வருடத்தில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மற்றும் நல்லெண்ணத்தோடு எமரால்டு பகுதியில் சுற்றியுள்ள குக்கிராமங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாடல் நடனம் ஓவியம் எம்ராய்டிங் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயனுள்ள அம்சங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும் அதே நேரத்தில் அந்த ஏழ்மையான குடும்பத்திற்கு ஒரு வருமானம் ஈட்டும் வகையிலும் அவர்களுக்கு இந்த சுய தொழிலை கற்றுக் கொடுத்து வருகின்றனர்
இதற்கு அவர்கள் 10 நாட்கள் எமரால்டு பகுதியில் முகாமிட்டு இந்த குழந்தைகளுக்கு இது போன்ற பயனுள்ள அம்சங்களை கற்றுக் கொடுத்து வருகின்றனர் இதனால் அந்த குழந்தைகளும் இந்த கோடை விடுமுறை சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றி அவர்களின் தங்களது சொந்த முயற்சியில் ஒவ்வொரு பொருட்களை செய்து வருகின்றனர் இதனால் அவர்களின் கற்பனை திறனும் அவர்களுக்கு உள்ள திறனும் வெளிவருகிறது என்று இதன் அமைப்பாளர் திரு விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இந்த சிங்கப்பூர் குழுவினருக்கு எமரால்டு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் மணிகண்டன் போன்ற தன்னார்வலர்கள் இணைந்து இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் இவர்களுக்கும் இந்த சிங்கப்பூரைச் சார்ந்த பேமிலி அப்பேர் தன்னார்வ அமைப்பினருக்கும் எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்
அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் உரிதாக்கி கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணையாசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் அவர்களுடன் சேர்ந்து நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment