நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது.
ஒருவழிப்பாதை நடைமுறையில் உள்ள நிலையில் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் குறுகிய இடமான அரவேனு பகுதியில் நெரிசலில்சிக்கும் சற்றே விவரம் தெரிந்தவர்கள் குன்னூர் வண்டிச்சோலை பகுதியிலிருந்து அளக்கரை வழியாக அரவேனு வருவதால் அரவேனு பஜார்பகுதி மக்கள் நடக்ககூட முடியாமல் திக்கித்தினரும்.
மே 18,19,20 ஆகிய நாட்களில் வானிலை மையத்தின் மிககனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரிக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமான தேயிலைக்கு விலையின்றி மக்கள் மிகவும் சிரமப்படும் நிலையில் பரபரப்பாக காணப்படும் அரவேனு பஜார் பகுதி உள்ளூர் மக்களின் நடமாட்டமின்றியும் வாகனங்களின் நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுவது கொரோனா காலத்தை போல இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment