விவசாயிகள் கைதாகி - ஜாமீனில் வெளிவந்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 May 2024

விவசாயிகள் கைதாகி - ஜாமீனில் வெளிவந்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் தும்பூர் ஊரைச் சேர்ந்த திரு.ஐ.போஜன் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. 


இந்த சங்கமானது மலை மாவட்டமான நீலகிரியில் சிறு விவசாயிகளின் பிரச்னைகளுக்காக அதன் உறுப்பினர்களுடன் இணைந்து தன்னலமின்றி இயங்கி போராடுவதுடன் சிறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

நீலகிரியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்  மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கிராமம் கிராமாமாக சென்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான தேயிலைக்கு உரிய விலை கிடைக்க தேர்தல் புறக்கணிப்பு செய்ய வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்தனர்.

உடனடியாக தேர்தல் கமிஷன் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் 15.5.2024 அன்று தேனாடுகம்பை காவல்நிலையத்தால் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுத்தனர்.மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தை சேர்ந்த 15 பேர் தேனாடுகம்பை காவல்நிலையம் சென்றனர்.


தேர்தல் ஆணையத்தின் வழக்குக்காக சங்கத்தின் நிர்வாகிகள் தும்பூர் திரு.ஐ.போஜன், ஜக்கனாரை திரு.சிவாஜிராமன், கேர்க்கம்பை திரு.காரி,   மற்றும் பில்லிக்கம்பை திரு.நடராஜ் ஆகிய 4 பேரை தேனாடுகம்பை காவலர்கள் கைது செய்தனர்.

விசாரணைக்குப்பிறகு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் காவல் நிலைய ஜாமீனில் வெளியை வந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad