உதகை தாவிரவியல் பூங்கா முகப்பில் கழிவு நீர் வெள்ளம். பெரும் சுகாதார சீர்கேடு என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

உதகை தாவிரவியல் பூங்கா முகப்பில் கழிவு நீர் வெள்ளம். பெரும் சுகாதார சீர்கேடு என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி .

 



உலக புகழ்பெற்ற உதகை தாவிரவியல் பூங்கா முகப்பில் கழிவு நீர் வெள்ளம். பெரும் சுகாதார சீர்கேடு என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி .



நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.


 உலக புகழ் பெற்ற சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில்  குடும்பமாக குவிந்துவரும் உதகை தாவிரவியல் பூங்காவின் முகப்பில்  கழிவு நீர் 

சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு  முகப்பு பகுதியில்  சாலைமுழுவதும்  வெள்ளம் போல கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடும் துர்நாற்றத்துடன் கழிவு நீர் வெளியேறுவதால் வயதானவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் கழிவு நீர் சாலை முழுவதும் வெள்ளம் போல் செல்வதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. 


பாதசாரிகள் மீதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீதும் வாகனங்கள் செல்லும் பொழுது கழிவுநீர் தெளித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் காரணமாக பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


உலக புகழ்பெற்ற உதகை தாவிரவியல் பூங்கா முகப்பில் கழிவு நீர் வெள்ளம் போல் ஓடுவது பெரும் சுகாதார சீர்கேடு என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad