கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

 



நீலகிரி மாவட்டம்  கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

தேசிய புலிகள்  பாதுகாப்பு ஆணையத்தின் உத்திரவின்  வழிகாட்டுதலின்படி    உள் மண்டல வனச்சரகங்களில் தெப்பக்காடு,கார்குடி மசினகுடி,முதுமலை மற்றும் நெலக்கோட்டை சரகங்களில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.



 கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.தாவர உன்னி ஊன்உன்னி கணக்கெடுக்கும் பணி இன்று முதல் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் மண்டல வனப்பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் இதில் 37 குழுக்களாக பிரிந்து தலா ஐந்து பேர் வீதம் 185.பேர் கணக்கெடுத்து வருகின்றனர். வனவிலங்குகளில் எச்சம் கால்தடம்  தரைகீரல் மரக்க்கீரல் போன்றவை வைத்து கணக்கிடப்படுகிறது. முதுமலையில் செல்போன் செயலியின் மூலம் இது நடத்தப்படுகிறது ஒவ்வொரு குழுவில் உள்ளவர்களும் தொலைநோக்கி ஜிபிஎஸ் கருவி, மீட்டர் உபகரணங்களை கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad