நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று காலை.11:35 முதல் கன மழை தொடங்கியது.இன்று காலை முதலே வானம் தெளிவாக இருந்த நிலையில் திடீரென்று பெருமழை பெய்யத்தொடங்கியது... இந்நிலையில் ரோடுகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. அதனால் வாகனங்கள் ரோட்டோரங்களில் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. இந்த மழையானது மூன்று நாட்களுக்குப் பெய்யும் என்று,நேற்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
எனவே நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் 18 ,19, 20 சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியாளர்.அருணா. இ.ஆ.ப., அவர்கள் நேற்றைய தினமே அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment