நீலகிரி மாவட்டம் உதகை நகரில் பல மாதங்கள் வருடங்களாக நகரில் பல இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும். பள்ளி செல்லக் கூடிய மாணவ மாணவிகளும் சுற்றி தெரியும் கால்நடைகளை கண்டு பயந்து அச்சத்தில் செல்கிறார்கள் .
இந்த நிலையில் இன்று. உதகை நகர பி1 காவல் நிலையத்திற்கு கீழே உள்ள ப்ளூ மொவுண்ட் சாலையில். பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் ஒன்றாக கூடி சாலையை ஆக்கிரமித்தன. இதில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நின்றது கால்நடைகளை விரட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினார்கள்.அதன் பிறகு காவல்துறை நண்பர் ஒருவர் அந்த கால்நடைகளை விரட்டினார் அதற்குப்பிறகு வாகனங்கள் சென்றன இதை பல முறை பதிவிட்டும் கூறியும் நகராட்சி நிர்வாகமும் அதன் அதிகாரிகளும் கண்டுக்கொள்ளாமலே இருந்து வருகிறார்கள்.யாருக்காவது எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் தான் இதற்கு ஒரு தீர்வு காணுவார்களென்று தெரிகிறது அது வரையில் நகரில் பல பகுதிகளிலும் கால்நடைகள் இப்படி தான் சுற்றி திரியும் என தெரிகிறது.
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment