படுகர் தினவிழா உருவான வரலாறு (35 ஆண்டுகள்) - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 May 2024

படுகர் தினவிழா உருவான வரலாறு (35 ஆண்டுகள்)



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே 15 ஆம் தேதி படுகர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.


படுகர் தினவிழா 35  ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. படுகர் தின விழா உருவான வரலாறு விவரங்கள்.


பல ஆயிரம் ஆண்டுகளாக மலைமாவட்டமான நீலகிரியில் பூர்வகுடியின படுக மக்கள் வசித்து வருகின்றனர்


அரசியல் காரணங்களுக்காக அப்போதைய தலைவர்கள் படுக இன மக்களை ST ( மலை வாழ் மக்கள்) பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர் அதற்குப்பிறகு மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர் இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி ஊட்டியில் பல லட்சம் படுக மக்கள் மற்றும் பெண்கள் கலாச்சார உடையணிந்து மீண்டும் தங்களை ST ( மலைவாழ் மக்கள்) பட்டியலில் சேர்க்க வேண்டும் உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது.


அன்றைய தின கூட்டத்தில் இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று படுகர் தின விழா கொண்டாடுவது என முடிவெடுத்து ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் படுகர் தின விழா இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.


1989 ஆம் ஆண்டு மே  மாதம் 15 ஆம் தேதி அன்று நடைபெற்ற வரலாற்று சிறப்பு பெற்ற எழுச்சி மிகு ஊர்வலத்தில் நானும் பங்கேற்றதில் பெருமையாக உணர்கிறேன்.

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad