நிலையான வளர்ச்சிக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 May 2024

நிலையான வளர்ச்சிக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு.



பிதிர்காடு செருகுன்னு பகுதியில் நிலையான வளர்ச்சிக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆல் த சில்ரன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் த சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தங்கினார். மகளிர் குழு நிர்வாகி செல்வி முன்னிலை வகித்தார்.



கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நமது தேவைக்காக மின் உற்பத்தி செய்து நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது இவற்றில் மின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  மின் உற்பத்தி மேற்கொள்ளும் போது ஏற்படும் கார்பன் வெளியீடு மற்றும் அனு மின் உற்பத்தி யில் யுரேனியம் தட்டுப்பாடு கடலில் கலக்கும் கழிவுகள் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.  இதனால் உலக வெப்பமயமாதல் பருவ நிலை மாற்றம் என்கிற பல்வேறு பாதிப்புகள் காரணமாகவும் கூடுதல் மின் உற்பத்தி பாதிக்கிறது.


இதனால் மக்களின் மின் தேவை சமாளிப்பதற்கு சிரமப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே குறைந்த மின் சக்தி தேவையுள்ள இடங்களான வீடு மற்றும் கடைகள் உள்ளிட்டவற்றில் சூரிய கின் சக்தி மூலம் மின்தேவையை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் பாதிப்பு இல்லாத மின் பயன்பாட்டினை பெற முடியும். அதுபோல வீடுகளில் உள்ள காய்கறி கழிவுகள் சாணம் உள்ளிட்டவற்றை கொண்டு எரிவாயு அமைக்கும் நிலையில் எரிவாயு தேவையை வீடுகளில் நிறைவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் குடும்ப செலவுகள் குறைவதோடு, நாட்டின் எரிசக்தி தேவைக்கான செலவினமும் குறையும். இதன்மூலமாக கார்பன் வெளியீடு குறைந்து வெப்பமயமாதல் குறையும். மக்கள் தங்களின் எரிசக்தி தேவைக்கு நிலையான எரிசக்தி முறைகளை தேர்வு செய்ய வேண்டும் கார்பன் அளவை குறைக்க வெட்டிவேர், கற்றாழை போன்றவை ஊடுபயிராக வளர்க்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad