நெட்வொர்க் பாதிப்பு - ஆபத்து மற்றும் காரணங்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 22 May 2024

நெட்வொர்க் பாதிப்பு - ஆபத்து மற்றும் காரணங்கள்.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக செல்போன் சிக்னல் மற்றும் இண்டர்நெட் சேவை அடிக்கடி விட்டு விட்டு இணைப்பு கிடைக்கிறது.


இதனால் வங்கி சேவை உட்பட பொதுமக்களின் அனைத்து தேவைகளும் பாதிக்கப்பட்டது.ஏடிஎம்மில் பணம் எடுத்தால் பணம் வராமல் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டது, ரிவர்ஸ் எனும் முறையில் திரும்பி வராததால் அவரச கதியில் இருக்கும் மக்களின் பணம் வங்கியில் முறையிட்டு ஆராயப்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு மேல் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.


கோத்தகிரி ஜெனரல் ஏஜன்சீஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளரால் அனுப்பப்பட்ட தொகை நிறுவனத்தின் கணக்கிற்கு வந்ததாக காட்டப்பட்டுள்ளது ஆனால் தங்கள் கணக்கிற்கு வரவில்லை என ஊழியர் போஜி அவர்கள் வங்கியை தொடர்பு கொண்ட போது அந்த தொகை வாடிக்கியாளரின் கணக்கிற்கே திரும்ப சென்றதால் அதிர்ச்சியடைந்தனர்.


இப்படி பல குளறுபடிகள் நிலவுகின்றன.விசாரித்ததில் காலனிலை பாதிப்பு எனவும், ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் 5 ஜி சேவைக்கான வேலை நடைபெறுவதாகவும் , வேலையாட்கள் பற்றாக்குறை எனவும், சூரியப்புயலின் தாக்கத்தின் ஆரம்பம் எனவும் அரசியல் வாதிகளின் தந்திரம் எனவும் கருத்து நிலவுகிறது..


கடுமையான சூரியப் புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் இதனால் மின் கட்டமைப்பு தகவல்தொடர்பு கட்டமைப்பு,கடலுக்குஅடியில் செல்லும் கேபிள்கள் கட்டமைப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனத்தினர் உட்பட அரசும் மற்றும் பணம் படைத்தவர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad