வயதானவரை காட்டு யானை தாக்கியத்தில் காயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 May 2024

வயதானவரை காட்டு யானை தாக்கியத்தில் காயம்





கூடலூரை அடுத்துள்ள ராக்வுட் என்ற பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது இதுபோன்று தேவர் சோலை நெலக்கோட்டை பிதிர்காடு போன்ற பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர் சிலர் படுகாயம் அடைந்து உயிர் தப்பக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது .காட்டு யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகின்றன ...


இதன் ஒரு பகுதியாக ராக்வுட் எமரால்டு டிவிசன்  பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்  வயது 51 என்பவர் கடைப்பகுதியில் இருந்து வீட்டிற்கு  சென்று கொண்டிருந்த பொழுது சாலை ஓரமாக மறைவில் இருந்த யானை இவரை தூக்கி வீசியது இதில் மணிகண்டன் என்பவர் கை மற்றும் தலைப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டது இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை காப்பாற்றி கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து முதல் உதவி செய்யப்பட்டது.


இந்த சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் இது போல் கடந்த வாரம் ஒரு முதாட்டி யானையால் தாக்கப்பட்டு இறந்தார் தொடர்ந்து யானைகள் தாக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.இதனால் வனத்துறை யினர் யானைகள் தொல்லை செய்யும் பகுதிக்கு இரவு பகலும் வனத்துறையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்...


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad