சிக்கிய வாகனங்கள் : சாலையே தெரியாத அளவு தண்ணீர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 May 2024

சிக்கிய வாகனங்கள் : சாலையே தெரியாத அளவு தண்ணீர்




உதகையில் இன்று  4 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக, உதகை கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் உதகை மத்திய பேருந்து நிலையம் - படகு இல்லம் சாலையில் உள்ள இரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது.


இதனால் சுற்றுலா மற்றும் இதர வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. உதகை - காந்தள் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் காந்தள் பகுதியிக்கு செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் ஆரஞ்சு அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ள நிலையில் கன மழையினால் பாலத்தின் அடியில் தண்ணீர் சூழ்ந்ததால் படகு இல்லம் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். சிலரது வாகனங்கள் குளம் போல தேங்கிய நீரில் செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டது. கர்நாடக பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனம் தரைபாலத்தின் அடியில் தேங்கிய மழை நீரில் மாட்டிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள்  உதவியுடன் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். மற்றும் இயக்க முடியாமல் நின்ற காரை கயிறு கட்டி இழுத்து மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்.


மழை காலங்களில் இந்த பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. உதகை நகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் வளன் விமல் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:

Post a Comment

Post Top Ad