நீலகிரி பாறைகளில் நீர்சுறப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 May 2024

நீலகிரி பாறைகளில் நீர்சுறப்பு


நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழையின்றி  கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது நீலகிரி பாலைவனம் ஆகிவிடுமோ என அஞ்சிய நிலையில் வருண பகவானின் கருனையால் கோடை மழை பெய்தது இதனால் உள்ளூர் மக்கள் சற்றே நிம்மதியடைந்தனர்.


தொடர்ந்து கோடை மழையானது பருவ மழை போல் நிதானமாக பெய்ததால் நீர் நிலத்தால் உரிஞ்சப்படும் அளவுக்கு நன்றாக தொடர்ந்து பெய்தது.தற்போது பாறைகளில் நீர் வழிந்தோடும் நிலைக்கு வந்துவிட்டது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து பருவமழையும் பெய்தால் இந்த ஆண்டு குடிநீர் தேவை பூர்த்தியடையும்.விவசாயிகள் நிம்மதியடைந்துள்ள நிலையில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் உரிய விலை இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad