வருணபகவான் கருணையால் உதகையில் சாரல்மழை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

வருணபகவான் கருணையால் உதகையில் சாரல்மழை.

 



நீலகிரி மாவட்டம் உதகை  கடந்த 5 மாதங்களாக மழையின்றி தவித்தது, சமவெளி பகுதிபோல் வெயில் சுட்டெரித்தது, முதல் முறையாக 73 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது அனைத்து அணைகளும் வறண்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதுடன் உதகை நகரில்  கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.


 கோடைமழை பொய்த்த நிலையில் வருணபகவான் கருணையால் இன்று (3.5.2024) உதகை நகரில் ஓரிரு இடத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது இதனால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


உள்ளூர் மக்கள் கூறுகையில் இயற்கைக்கு எதிரான அத்துமீறலால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்ததாகவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கைகளும் உணர்த்தும் உண்மையை அனுபவித்ததாக கூறினார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad