மேங்கோரஞ் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 May 2024

மேங்கோரஞ் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



மேங்கோரஞ் எஸ்டேட் தேயிலை  தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கேபிடிஎல் பவுண்டேஷன், ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற முகாமுக்கு ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். 


ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய துணைத் தலைவர் ராஜா, மருந்தாளுனர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேங்கோரஞ் மருத்துவமனை மருத்துவர் சர்மிளா,  முதுநிலை மருந்தாளுனர் ரமேஷ், தேயிலை உற்பத்தி அலுவலர் சைலேஷ்,  பொறியாளர் வினோத் ஆகியோர் முகாமினை துவங்கி வைத்தனர்.


பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசும்போது காற்றின் மூலம் பரவும் காச நோய் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு விரைவில் தாக்கும். எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மூலம் எளிதில் கண்டறிய முடியும். நோய் தாக்கம் இருந்தால் முன்னெச்சரிக்கையுடன் இருந்து அடுத்தவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் காச நோய் இருப்பது கண்டறியும் போது அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு குணப்படுத்தப்படுகிறது. காசநோய் இருப்பவர்கள் தொடர் சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் எளிதில் குணமடைய முடியும். என்றார்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது காசநோய் காற்றின் மூலம் பரவும் தொற்று நோயாக உள்ளது. 


நோய் தாக்கம் இருந்தால் தொடர் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் இதன் மூலம் காசநோய் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெறலாம். காசநோய் உள்ளவர்களை ஒதுக்கி வைக்காமல் அரவணைத்து செல்ல   வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்.நிகழ்ச்சியில் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad