நீலகிரி மாவட்டம் உதகை நகரின் உலகப் பிரசித்தி பெற்ற தோட்டக்கலைத் துறையினர்களால் பராமரிக்கப்பட்டு வரும் அரசு தாவரவியல் பூங்காவில் 126 ஆம் ஆண்டு. மலர் கண்காட்சி கடந்த பத்தாம் தேதி அன்று கோலாகலமாக துவக்கி வைக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்று. 15 5 2024. புதன்கிழமை ஆறாவது நாளாகிய இன்று வரையில் அதிக சுற்றுலா பயணிகள் கூட்டத்துடன் ஆராவாரமாய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வண்ண வண்ண மலர் அலங்காரங்களுடனும் வண்ண வண்ண பூந்தொட்டிகளுடனும். பிரம்மாண்ட அலங்கார வளைவுகள் உடனும் உதகை தாவரவியல் பூங்காவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இன்றைய தினம் லோகு இன்னிசை பாடல் குழுவினர்களின் இன்னிசை கச்சேரியும் நடந்து கொண்டிருந்தது. இதை அனேக சுற்றுலா பயணிகள் அமர்ந்து கேட்டு மகிழுந்து கொண்டிருந்தார்கள். இ பாஸ் முறையை அமல்படுத்தியும் கூட. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறதே தவிர. கூட்டம் குறைந்த பாடில்லை.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment