தொடர் மழையால் மீண்டும் பசுமைக்கு திரும்பிய முதுமலை வனப்பகுதி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

தொடர் மழையால் மீண்டும் பசுமைக்கு திரும்பிய முதுமலை வனப்பகுதி




       கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான முதுமலை, மசினகுடி, பந்தலூர் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோடை வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு வனப்பகுதியில் உள்ள பசும்பொற்களும் கருகியதால் அங்குள்ள காட்டு யானைகள்,காட்டெருமைகள், மான்கள், உள்பட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது.                   இதன் காரணமாக அவற்றில் பெரும்பாலானவை தற்போது வனப்பகுதியையொட்டி உள்ள  குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 



மேலும் அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழை, தென்னை, பாக்கு, போன்றவற்றை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர், முதுமலை, மசனகுடி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது இதனால் அங்கு தற்போது கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது மேலும் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து காணப்படுகிறது. கூடலூர் முதுமலை மசினகுடி பகுதியில் தொடர் மழையால் வரட்சியின் பிடியில் சிக்கி தவித்த வனப்பகுதிகளில் தற்போது பச்சைபசேல் பசுமை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. மேலும் வனவிலங்குகளின் பசுந்தீவன தட்டுப்பாடு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட்டு உள்ளது. 


நீலகிரியில் சுமார் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பக வணப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில், தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அங்குள்ள மான்கள் தற்போது கூட்டம் கூட்டமாக மீண்டும் சாலையோரம் சுற்றி திரிந்து வருகிறது இந்த காட்சிகள் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது மேலும் லங்குர் குரங்குகளையும் சாலை ஓரங்களில் மீண்டும் அதிகளவில் பார்க்க முடிகிறது. இதனால் அங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மேலும் மேலும் மகிழ்ச்சி அடைகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad