கோத்தகிரியில் நடைபெற்ற இந்திய நுகர்வோர் சம்மேளன 24-வது நிறுவன நாள் கடைபிடிக்க பட்டது. நிகழ்ச்சிக்கு இந்திய நுகர்வோர் சம்மேளன மாநில துணை தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்திய நுகர்வோர் சம்மேளன நீலகிரி மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார்.
நுகர்வோர் சம்மேளன மாநில தலைவர் திருநாவுக்கரசு, இணை செயலாளர் சி. செல்வகுமார், மதுரை மண்டல தலைவர் மனோகரன் தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் இந்திய நுகர்வோர் சம்மேளன செயல்பாடுகள், எதிர்கால நுகர்வோர் சார் பயிற்சிகள் வழங்குதல், உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அருண் கென்னடி நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment