பந்தலூர் பஜாரில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 May 2024

பந்தலூர் பஜாரில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

 



ஆல் த சில்ரன் அமைப்பு மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் பந்தலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  


நிகழ்ச்சிக்கு ஆல் த சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ராஜா,  மகேந்திரா பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கோடை வெப்பம் தணிக்கும் வகையில் அதிக நீர் அருந்த வேண்டும். குடை பிடித்து கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து கொள்ள முடியும். மோர் குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, ஆனால் அதிக புரதம் உள்ளது, இந்த புரதச்சத்து அதிக நேரம் இயற்கையான தாகத்தைத் தணிக்கும் நீரேற்றத்திற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளன, இவை வெப்பமான காலநிலையில் உடலின் திரவ சமநிலையை நிரப்ப உதவுகிறது. மனித உடலின் இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர்புடைய இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே அதிக நீர் அருந்துவது அல்லது அவ்வப்போது மோர் அருந்த வேண்டும் என்றார். தொடர்ந்து நீர்மோர் வழங்குவதை துவக்கி வைத்தார்.  


நிகழ்ச்சியில் பந்தலூர் பழைய பேருந்துக்கு காத்திருந்த பயணிகள், இந்தியன் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நீர் மோர் குடித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad