இ-பாஸ் நடைமுறை : நீலகிரி மாவட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 May 2024

இ-பாஸ் நடைமுறை : நீலகிரி மாவட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு


நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இன்று 07-05-2024 முதல் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கல்லார் (தூரிபாலம்), மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி, தொரப்பள்ளி, மசினகுடி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.



நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இன்று 07-05-2024 முதல் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கல்லார் (தூரிபாலம்), மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை, தொரப்பள்ளி, மசினகுடி ஆகிய பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் தொடர்பான மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் இன்று (07.05.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.




பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

       மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும்,பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு,தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என 29.04.2024 அன்று உத்தரவிட்டிருந்தது.


இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய வரும் வாகனங்களை அந்தந்த சோதனை  சாவடிகளிலேயே நிறுத்தி, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களை கொண்டு, மாவட்ட எல்லையிலேயே இ-பாஸ் எடுத்து அதன் பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இ-பாஸ் முறையினை நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை, கல்லார் (தூரிபாலம்), கக்கநல்லா(தொரப்பள்ளி - மசினகுடி), நாடுகாணி உள்ளிட்ட மாநில, மாவட்ட சோதனை சாவடிகளில் சோதனை மேற்கொண்டு அனுமதிக்கப்படுகிறார்கள். 


இ-பாஸ் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் பதிவு செய்து தரும் வகையில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இ-பாஸ் பதிவு செய்து, பயணம் மேற்கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் க்யூ ஆர் கோட் -ஐ ஸ்கேன் செய்ய ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா 2 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை கண்காணிக்கும் வகையில் அனைத்து சோதனைச் சாவடிகளில் துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடைமுறை பயனுள்ளதாகவும், எளிமையாகவும் இருந்ததாக பல்வேறு சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கீர்த்தி பிரியதர்சினி,வருவாய் கோட்டாட்சியர் திரு.மகராஜ் (உதகை), திரு.சதீஷ் (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.மணிகண்டன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.அன்பரசு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திரு.குழந்தைராஜ், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திரு.ராஜா, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் திரு.ராதாகிருஷ்ணன்,வட்டாட்சியர்கள் திரு.சந்திரன் (மேட்டுப்பாளையம்), திரு.சரவணகுமார் (உதகை),திரு.கனிசுந்தரம் (குன்னூர்), திருமதி.கோமதி (கோத்தகிரி), திருமதி.ராஜேஸ்வரி(கூடலூர்), குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சந்திரசேகர், திருமதி.அனிதா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அண்ணாதுரை,திருமதி.விஜயா, வருவாய்த்துறை, காவல்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:

Post a Comment

Post Top Ad