பந்தலூர் முழுநேர நூலகத்தில் மகளிர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 May 2024

பந்தலூர் முழுநேர நூலகத்தில் மகளிர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது.




பந்தலூர் முழுநேர நூலகம், ஆல் த சில்ரன், சாலிடாரிடட் அமைப்பு, மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் மகளிர் சுயதொழில் முனைவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுயதொழில் பயிற்சி வழங்கபட்டது.



பந்தலூர் முழு நேர  நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பந்தலூர் முழுநேர நூலகர் அறிவழகன் தலைமை தாங்கினார். 


மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத்,ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா, நூலகர் நித்திய கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மகளிர்கள் தங்களின் ஓய்வு நேரம் தொழில்களை உருவாக்கிக் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள முடியும். சுய தொழில்களில் உருவாக்கும் பொருட்களை குழுக்களில் பரிமாற்றங்கள் செய்து கொள்வதன் மூலம் உள்ளூர் பொருளாதார மேம்பாடும் அடையும் தரமான பொருட்களை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் மேலும் தற்போதைய சூழலில் இணையம் மூலமாகவும் தங்கள் பொருட்களை சமூக  வலைதளங்களில் விளம்பரம் செய்து வருவாய் பெற முடியும். என்றார்.


சாலிடாரிடட் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசும்போது சிறு தொழில் மேற்கொள்ள 25-க்கு மேற்பட்ட தொழிலாளர் குறித்து மகளிர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது இந்த பயிற்சி மூலம் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். மகளிர் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில் அவர்களை தேவையான பயிற்சிகள் எங்கள் அமைப்பு சார்பில் வழங்கப்படும் என்றார். 


சாலிடாரிடட் நிறுவன சுய தொழில் பயிற்சியளர் ஆரோக்கியசாமி பேசும்போது மகளிர்கள் சுய உதவி குழு மூலம் ஒருங்கிணைந்து செயல்படும் போது ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகராட்சிகள் சார்பில் சுழற்சி நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல சுய உதவி குழுவிற்கு வங்கிகளில் கடன்களும் அதிக அளவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மகளிர்கள் முதலீடு செய்து சிறு தொழில்களை வீட்டிலேயே செய்து விற்பனை செய்ய முடியும். மகளிர் குழுக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்றார்.


தொடர்ந்து மகளிர்க்கு குளியல் சோப்புகள் தயாரிக்கும் செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பந்தலூர் பகுதிகளைச் சார்ந்த 50 க்கு மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக எருமாடு நூலகர் கலைச்செல்வன் வரவேற்றார். முடிவில் கொளப்பள்ளி நூலகர் முத்துசாமி நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad