கோடைவிழா - காய்கறி பழங்கள் வீண், விவசாயிகள் கண்டனம் . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 26 May 2024

கோடைவிழா - காய்கறி பழங்கள் வீண், விவசாயிகள் கண்டனம் .



நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா இன்றுடன் முடிவடைந்ததால் உள்ளூர் மக்கள் சற்றே‌ நிம்மதி அடைந்தனர்.டன் கணக்கில் காய்கறிகள் பழங்கள் வீணாக்குவதற்க்கு கண்டனம் தெரிவித்து  நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நீலகிரி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் திரு.என். விஸ்வநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார் அதன் விபரம்.


நீலகிரி மாவட்டத்தில் சீசன் நேரங்களில் உதகமண்டலம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பூங்காக்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக டன் கணக்கில் பழங்களையும் காய்கறிகளையும் தோட்டகலை துறையினர் நுழைவு வாயில்களில் கட்டியும் மிருகங்களின் உருவங்களை உருவாக்கி  ஒரு வாரத்திற்கு பின் அவைகளை குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர் .


பழங்களையும் காய்கறிகளையும் உற்பத்தி செய்ய விவசாயிகள் படும் கஷ்டங்கள் என்னை போன்ற விவசாயிக்குதான் தெரியும்.அரசு(மக்கள்)பணத்தில் அவைகளை வாங்கி விணாக்குவது அதிகாரிகளுக்கு தெரிய வாய்பில்லை  .


தோரணங்கள் கட்டாமல் இருந்தால் சுற்றுலா பயணிகள் வர மாட்டார்களா?ஆகவே தாங்கள் தயவு செய்து இந்த செயலை இனி வரும் காலங்களில் நடக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு அந்த கண்டன கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad