தங்கம் அதிர்ச்சி தகவல்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 May 2024

தங்கம் அதிர்ச்சி தகவல்கள்


இந்த ஆண்டு அக்ஷய திருதியை   அன்று 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகியுள்ளது அதனால்நகைகடை வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .


இதில் 80 சதவிகிதம் நகையாகவும் 20 சதவிகிதம் மட்டுமே தங்க நாணயமாகவும் விற்பனையாகியுள்ளது.




அட்சய திருதியை  அன்று நமது தமிழக குரலால் எடுக்கப்பட்ட  மக்கள் கருத்துக்கள் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.


இந்த நிலையில் தமிழக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ஒரு லட்சம் என்ற நிலையை எட்டும் என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.


பொருளாதார தன்மை நிலையின்மை காரணங்களால் தங்கத்தின் மேல் முதலீடு செய்வது பாதுகாப்பு என்று மக்கள் எண்ணுவதாலும்  தங்களின் பண தேவைக்கு உடனடியாக பணமாக மாற்ற மாற்று வழியாக உள்ளதாலும் பாதுகாப்பு கருதி மக்கள் தங்கமாக வாங்கி சேமித்து வைக்கின்றனர் .

இதனால் செய்கூலி சேதாரம் என பல வகையில் உடனடியாக நஷ்டம் ஏற்படுகிறது என அறியாமல் புன்னகையுடன் நகையாக வாங்கி சேகரிக்கின்றனர். 


அதி புத்திசாலிகள் மற்றும் அதிக பணம் உள்ளோர் மட்டும் தங்க நாணயம் மற்றும் தங்க (பிஸ்கட் ) கட்டிகளாக வாங்குகின்றனர்.


உலக பொருளாதார நிலையும் நிலையில்லாமல் இருப்பதால் தங்கத்தின்  மேல் முதலீடு செய்வது பாதுகாப்பு என கருதி அனைத்து நாடுகளும் தங்க கைபிருப்பை வைத்துக்கொள்கின்றன.


தங்கம் கையிருப்பு வைப்பதில் உள்ள பட்டியலில் அமெரிக்கா 6100 டன் களுடன் முதலிடத்திலும் ,622 டன்கள் கையிருப்புடன் இந்தியா 9 வது இடத்திலும் உள்ளது.


தங்கத்தின் விலையேற்றம் பொது மக்கள் மற்றும் சாமானிய மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவுன் ரூபாய் 1லட்சத்தை தாண்டினால் பொதுமக்களின் உயிருக்கும் சட்டம் ஒழுங்குக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அனுபவ அறிவாளிகள் கூறுகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad