அட்சய திருதியை என்றால் என்ன? மக்கள் கருத்து. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 11 May 2024

அட்சய திருதியை என்றால் என்ன? மக்கள் கருத்து.




அக்ஷய திருதியை என்றால் என்ன அட்சய திருதியை நாளில் என்ன பொருள் வாங்கலாம்.

அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம்தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.



இந்த ஆண்டு (2024) மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்கி மே 11ஆம் தேதி மதியம் 2 . 50 மணிக்கு நிறைவடைகிறது.

அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். 


 அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் பெருகும் என்பது ஐதீகம்.


 அட்சய திருதியை தங்கம் வாங்கலாம். அட்சய திருதியை என்றால் பலருக்கும் தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் நினைவுக்கு வரும்.


அட்சய திருதியை அன்று தங்கம் தவிர வேற என்ன வாங்கினால் செல்வம் பெருகும் .


அட்சய திருதியை தானம் செய்வதற்கான நாள் என்பதால் இந்த நாளில் அரிசி, பருப்பு, கோதுமை, ஆடை போன்ற பொருட்களை தானம் செய்யலாம்.


ஆனால் மக்கள் நகை கடைகளில் மட்டும் குவிவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மக்களின் கருத்துக்களை நாம் கேட்டோம் அந்த கருத்துக்கள் பின் வருமாறு.


*அட்சய திருதியை என்றால் என்ன என அர்த்தம் தெரியாது.


*தங்கம் வாங்கினால் பெருகும் என கூறினார்கள்.


*நான்கைந்து வருடமாக தங்கம் வாங்குகிறேன் பெருகவில்லை.


*ஒரு மாதத்திற்குள் மார்வாடி கடைக்கு சென்றுவிடுகிறது. ஆனாலும் நம்பிக்கையில் வாங்குகிறேன்.


*வருடத்திற்கு 2 கிராம் மட்டுமே தங்க நாணயமாக வாங்குகிறேன் அப்படியே இருக்கிறது.


*மனைவி வற்புறுத்தினார். இந்த ஆண்டு தான் முதல் முதலாக அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினேன்.


*சித்திரை மாதம் வியாபாரமின்றி இருந்ததை சரி கட்ட நகைகடையினர் கட்டி விட்ட கட்டுக்கதை.


*ஆடித்தள்ளுபடி என துணிக்கடையினர் யோசித்து செய்தது போல நகைகடையினரின் மாஸ்டர் பிளான்.


*இதுவரை இந்த நாளில் வாங்கிய தங்கம் கையில் இல்லை ஆனாலும் மனைவியின் பேச்சை மீற முடியாமல் கடன் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.


இப்படியாக மக்களின் கருத்து இருந்தது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் ‌ தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad