நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் ஆகும் வருடம்தோறும் திருவிழா நடைபெறும் நிலையில் நேற்று ஆரம்பித்த திருவிழா.
இன்று (11.5.2024) சனிக்கிழமை வினாயகர் கோயில் வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலத்தில் சூலம் தீச்சட்டி பறவைக்காவடி மற்றும் பால்குட ஊர்வலம் சென்றது .
பக்தர்கள் ஆடி பாடி பேண்டுவாத்தியங்கள் இசைக்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனர்.
நாளை (12.5.2024 ஞாயிற்றுக்கிழமை) மாவிளக்கு பூஜை நடைபெறும்.
கோத்தகிரி காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை சீரமைத்து திரம்பட நிர்வகித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment