நீலகிரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற உதகை தோட்டக்கலைத் துறையினர்களால் பராமரிக்கப்பட்டு வரும் அரசு தாவரவியல் பூங்காவில் 126 ஆவது மலர்க் காட்சி இன்று காலை தொடங்கியது.
மலர் காட்சியினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப., அவர்கள் முற்பகல் 12:50 மணிக்கு. தொடங்கி வைத்தார்கள்.உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா. இ.ஆ.ப., அவர்கள் மற்றும். அரசின்பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் உடன் இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த பெரிய அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியாக உதகை ஜெ எஸ் எஸ். மருத்துவ பயிற்சி கல்லூரி மாணவியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் பிறகு தோடர் இன மக்களின் பாரம்பரிய பாட்டும் நடனமும் நடைபெற்றது. அதன் பிறகு படுக இனமக்களின் பாட்டும் நடனமும், அதன் பிறகு திபெத்திய மக்களின் பாட்டும் நடனமும் நடைப்பெற்றது.
மேலும் ரோஜா மலர்கள் கொண்டு 126 ஆவது மலர் கண்காட்சி என்றும் உதகை மலை ரயில் நீராவி இயந்திரம், டிஸ்னி வேர்ல்டு, மிக்கி மௌஸ் பொம்மைகள். இன்னும் மலர்களால் ஆன முயல் வடிவம் மக்களை கவர்ந்தது.
இன்றிலிருந்து வரும் இருபதாம் தேதி வரை 11 நாட்கள் நடக்கும். மலர் காட்சியினை காண இன்னும் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகை விஜயராஜ் மற்றும். நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment