நீலகிரி மாவட்டத்தில் 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை முதற்கட்ட மலையேற்ற பயிற்சி முகாம் தொடங்கியது. இம்முகாமினை கோவை மண்டல குரூப் கமாண்டர் கர்னல் சிவராம் நீலகிரி மாவட்ட 31 தமிழ்நாடு கம்பெனி கமாண்டர் கர்னல் சந்தோஷ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்துகின்றனர்.
இதில் மகாராஷ்டிரா ,ஆந்திரா , கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 550 பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து பயிற்சி பெறுகின்றனர். எம் பாலடா ஏகலைவா பள்ளியில் தங்கி மழை காய்கறி தோட்டங்கள், ஸ்டாபெரி பிரிவு, பழங்குடியினர் மையம், வானிலை ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதியினை பார்வையிட்டனர். அன்றாட 20 கிலோமீட்டர் வீதம் 120 கிலோமீட்டர் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து உதகை படகு இல்லம் பார்வையிட்டு வெலிங்டன் பகுதிகளை பார்வையிடுகின்றனர். பயிற்சிகளை என்சிசி அதிகாரிகள் சுப்பிரமணியன், சுவேதார் பத்மநாதன், அகல்தார் ராம், சீனிவாசன், எல்லப்பா கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment