எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 90% தேர்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 10 May 2024

எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 90% தேர்ச்சி


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கூக்கு கிராமங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த பள்ளியில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வினை 35 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 31 மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


 இதன் மொத்த விழுக்காடு என்னும் நிலையில் நூற்றுக்கு 90% விழுக்காட்டை பெற்றுள்ளது அதில் முதல் மதிப்பெண்ணாக 500க்கு 413 மதிப்பெண்கள் பெற்று எம் ஜி ஆர் நகர் பகுதியை சார்ந்த நாகராஜ் என்பவரது மகன் தினேஷ் எனும் மாணவர் 413 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார் அவருக்கு பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் சுற்றுவட்டார பொதுமக்களும் வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர் அவர்களுடன் சேர்ந்து தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் முதல் மதிப்பெண் பெற்ற தினேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் 90% விழுக்காட்டை பெற வைத்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad