78 ஆண்டுகால வரலாற்று வெப்ப அலைக்கு நடுவே புதிதாக நிறுவபட்டலJCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் அமைப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

78 ஆண்டுகால வரலாற்று வெப்ப அலைக்கு நடுவே புதிதாக நிறுவபட்டலJCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் அமைப்பு

 



78 ஆண்டுகால வரலாற்று வெப்ப அலைக்கு நடுவே புதிதாக நிறுவபட்டலJCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் அமைப்பு இளம் படித்த தொலைநோக்கு சின்தனையுடன் பணியாற்ற முனையும் குழுவுடன் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்கான முயற்சிக்களை கொண்டுவர முனைப்பு


குன்னூரில் JCI (ஜூனியர் சேம்பர் இன்டர்நேசனள்)அமைப்பு  28 ஆண்டுகளுக்குப் பிறகு குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் (JCI Coonoor Hills Sparks) என்ற புதிய JCI அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. புதிய அத்தியாயத்தின் பதவி பிரமாணம் நிறுவல் மற்றும் திறப்பு விழா 30 மே 2024 அன்று குன்னூர்- கோத்தகிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள UPASI அரங்கத்தில் நடைபெற்றது.


புதிதாக உருவாக்கப்பட்ட குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் (JCI Coonoor Hills Sparks) அமைப்பில் 40 வயதுக்கு மேற்பட்ட 8 JAC அலுமினி (JAC Alumni) உறுப்பினர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 2 ஜூனியர் ஜெய்சி (Jr.Jaycee) உறுப்பினர்கள் உட்பட 37 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுடன் நிறுவப்பட்டது.


43ஹேண்டிமேன்ஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் பொறியாளர் JC விஜயகாந்த் முத்துக்கிருஷ்ணன் பட்டயத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அமைப்பை வெற்றிகரமாக வழிநடத்த முதன்மையாக நிறுவப்பட்டுள்ளார். அதேபோல், டிடிசிபி கட்டிடப் பொறியாளர் JC கலைவாணி (Registered Architect - DTCP) தேர்வு செய்யப்பட்டு அத்தியாயத்தின் பட்டயச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்டிட பொறியாளர் JC டேனியல் கிறிஸ்டோபர் அத்தியாயத்தின் பட்டயப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.


நிர்வாகத்தின் துணைத் தலைவர்களாக குன்னூர் வழக்கறிஞர் சி தினேஷ்குமார், தொழில்முனைவோர் கல்பனா கோவர்த்தனன், பொறியாளர் முக்தஸ் மொய்னுதீன்,  INANSE  நிர்வனர் பிரசாத் ராமசாமி, காப்புரிமை முகவர் பிரியங்கா ராம்ராஜ், கட்டுமான திட்ட மேலாளர் சுகந்த் சுகுமாரன், JDS ஓட்டல் தொழிலதிபர் சத்தியமூர்த்தி கட்டுமான பொறியாளர் பிரதீப் டிரெசன் மற்றும் LO அதிகாரி கார்த்திகேயன் பால்ராஜ், லேடி ஜெய்சி நிவேதா வினோத்குமார், புல்லட்டின் ஆசிரியர் ஸ்ரீ வினுஷ் மற்றும் புல்லட்டின் இணை ஆசிரியர் சரோஜ்குமார் டேனியல் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.


நிர்வாகத்தின் இயக்குநர்களாக திட்டமிடல் பொறியாளர் மதுமிதா, தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பிரசாந்த் ரவி, பயோடெக்னாலஜிஸ்ட் விஸ்வானந்த், பயோடெக்னாலஜிஸ்ட் யோகானந்த், ஸ்விக்கி மேலாளர் விஜயபாரதி, பொறியாளர் ராதா ராஜா, மாஸ்டர் பார்மசிஸ்ட் ரெபேகல் ஜஹாங்கீர், மருத்துவப் பயிற்சியாளர் கனிஷ்க புருஷோத்தமன்,  ஜூனியர் ஜெய்சி தலைவர் சச்சின் ஜெபகுமார் மற்றும் ஜூனியர் ஜெய்சி செயலாளர் அக்சல்யா ராம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.


நிர்வாகத்தின் மூத்த JAC உறுப்பினர்கள் - திட்டத் தலைவர்களாக கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார், MKS இன்டீரியர்ஸ் அண்ட் டெகோர்ஸ் உரிமையாளர் சுரேஷ்மூர்த்தி, தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் கோவர்த்தனன் ராமசாமி, உபதலை கிராம ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் அன்பு ஆத்மா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செல்லகுமார் மூர்த்தி, 43ஹேண்டிமேன்ஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக இணை இயக்குனர் ஸ்ரீகாந்த் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் ராணுவம் திரு.ஜஹாங்கீர், குன்னூர் வோடபோன் டெலிகாம் தொழிலதிபர் பீட்டர் மற்றும் வழக்கறிஞர் எடப்பள்ளி ஜெயபிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்கள்.



நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக NAWA கோத்தகிரியிலிருந்து XVII மண்டல முன்னாள் தலைவர் JC HGF அல்வாஸ் கலந்து கொண்டார் உடன் கெளரவ விருந்தினர் JC கமல்குமார், முன்னாள் தலைவர், JCI குன்னூர், JC HGF அருசுல்லாஹ் மண்டல துணைத் தலைவர், மண்டலம் XVII, பாராட்டு உரை JC Er.Prasanath பகுதி ஒருங்கிணைப்பாளர், மண்டலம் A, Zone XVII,  JCI SEN தன்ராஜ், முன்னாள் தலைவர், JCI ஊட்டி, JC ஸ்டெலின், தலைவர் JCI கூடலூர் மற்றும் JC அசோக்குமார், தலைவர் JCI குன்னூர். 


இந்த நிறுவல் மற்றும் தொடக்க நிகழ்ச்சியின் போது, ​​JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் தலைவர் பொறியாளர் JC விஜயகாந்த் முத்துக்கிருஷ்ணன், நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் வாழ்வைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 2024 இல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்க திட்டங்களை அறிவித்தார்.


1. Let’s Throw Seed Balls - நீலகிரியில் உள்ள ஷோலா காடுகளை புதுப்பிக்க வேண்டி

2. Low Cars No Jams - நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரச்சாரங்கள் மற்றும் நிர்வாக விழிப்புணர்வு திட்டங்கள் எடுத்துரைக்க 

3. Stop Plastic Bottle - Start Reuse Bottle - பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்க வேண்டி

4. Nilgiris Youth Empowerment- நீலகிரி இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் திட்டங்கள்

5. Hill Road Safety Awareness - மலைப்பாதை பாதுகாப்பு விழிப்புணர்வு பலகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள்

6. Disaster Response Awareness & Training - பேரிடர் நடவடிக்கை விழிப்புணர்வு மற்றும் பயிற்சி


புவி வெப்பமடைதலால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு நீலகிரி மாவட்டத்தில் 78 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலத்தை விட நீலகிரியில் இயல்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை மேம்பட வேண்டும் என உணர்ந்து JC குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் அமைப்பின் தலைவர்கள் இந்த நீலகிரியை மேம்படுத்த உறுதிமொழி எடுத்துள்ளார் என்பது நம்பிகை அளிக்கிறது. 


நீலகிரியில் அரசாங்கமும் குடிமக்களும் கைகோர்த்து சில குறிப்பிடத்தக்க திட்டங்களை ஆதரவு அளித்தால்2030-ம் ஆண்டுக்குள் நிச்சயம் நம் நீலகரி சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.


பதவியேற்பு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்ததால், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே மாதிரியான பிளேஸர்களிலும் சக பெண்கள் உறுபினர்கள் கதர் சேலையுடன் கூடிய பிளேஸர்கள் அணிந்தனர் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் சிறந்த சைவ உணவுடன் நிகழ்வு நிறைவடைந்து முடிந்தது.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad