இன்று குன்னூரில் 64 வது பழக்காட்சி நடைபெறுகிறது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 May 2024

இன்று குன்னூரில் 64 வது பழக்காட்சி நடைபெறுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதத்தில்  கோடை விடுமுறையில் நீலகிரிக்கு அதிகம் பேர் வருவதால் அனைவரையும் மகிழ்விக்க கோடை விழா நடைபெறும்.


காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்காட்சி,ஆகிய நிகழ்வுகளுடன் கடைசி நிகழ்வாக பழக்காட்சி நடைபெறும்.


இந்த ஆண்டு கோடை விழாவின் கடைசி நிகழ்வாக குன்னூரில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த  சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சி நடைபெறுகிறது.




5 டன் பழங்களை கொண்டு வன விலங்குகளின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

மே 24 வெள்ளிக்கிழமை ஆன இன்று முதல் சனி  மற்றும் ஞாயிறு (24,25,26) ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.


நாளை புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகையால் மலை பாதையில் நிதானமான வேகத்தில் பயணித்து   பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்திப்பிரிவு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad