கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மன்சரிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 May 2024

கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மன்சரிவு



நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மிக கன மழையானது வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு நாட்கள் மழையின் காரணமாக வெளியே கூலி வேலைக்கு செல்லும் மக்கள்களும் மற்றும் பாரம் தூக்கும் தொழிலாளர்களும் மற்றும் சாலை ஓரம் வெளியே பல்வேறு கடைகளை வைத்து தங்களது அன்றாடப்பிழைப்பை நடத்தி வருபவர்களும் இந்த மிக கன மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.



கன மழையினால் சாலைகளில் பெருவெள்ளமும்  ஆங்காங்கே மண்சரிவு களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது நேற்று பிற்பகல் உதகை நகரில் உள்ள மேல் தலையாட்டிமந்து பகுதியில்   குடியிருப்புகள் உள்ள பகுதியின் ஓரம் உள்ள மண்சரிந்தது.இந்த  கனமழை இன்னும் சில நாட்கள் வரை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad