இன்று அக்னி முடிவு - 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 28 May 2024

இன்று அக்னி முடிவு - 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் .




தமிழகத்தில் டிசம்பர் முதல் மே வரை வறண்டவானிலை நிலவியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.இதில் நீலகிரி மாவட்டமும் விதிவிலக்கல்ல.


நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் வறண்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலத்தடிநீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றதால் உதகையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி சமாளிக்கும் நிலை ஏற்பட்டது.நீலகிரிக்கு வரவேண்டாம் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.


இப்படி அனைத்து செய்திகளும் நமது தமிழக குரலில் செய்திகள் வெளியிட்டோம்.வருண பகவான் கருணையால் அக்னி ஆரம்பித்த முதல் நாளான மே 4  அன்று நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது பற்றி  நமது தமிழக குரலில் செய்தி வெளியிட்டோம். 



நீலகிரி மக்கள் அக்னி நட்சத்திரத்தில் மழையை மட்டுமே பார்த்ததுடன்  புயல் போல் பேரிடர்களையும் எதிர்கொண்டனர். மே 28 ஆன இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது.நேற்றுமுதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மேலும் 5 நாட்களுக்கு வெப்பம் இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


5 மாத காலமாக வெயிலால் பாதிப்படைந்த மக்களால் அக்னியில்  பெய்த கோடைமழையை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதியுற்றனர்.


இந்த நிலையில் நேற்று ஒருநாள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்றுடன் 5 நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலுக்கு முட்டுக்கட்டை போட பருவமழை முன்னதாகவே கேரளாவில் ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இனி மக்களின் பாடு திண்டாட்டம் தான் எனவும் இயற்கைக்கு எதிராக நீலகிரியில் நடைபெறும் பணிகள் தான் காரணம் எனவும் தாங்கள் அதை காப்பாற்ற போராடி வருவதாகவும்.அதை மீறுபவர்கள் பேரிடர்களை அனுபவித்தே ஆக வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad