2.41 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுக்களித்த உதகை அரசினர் தாவரவியல் பூங்கா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

2.41 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுக்களித்த உதகை அரசினர் தாவரவியல் பூங்கா

 

           

           நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மலர்கண்காட்சி கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது.  


இதனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுமார் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் 20 அடி உயர டிஸ்னி வேர்ல்ட் பல்லாயிரம் பூக்களால் நீலகிரி மலை ரயில் உள்பட பல்வேறு உருவங்கள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.  இவற்றை அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண் குளிர கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் பூ அலங்கார உருவங்கள் முன்பாக குடும்பத்துடன் நின்று சுய புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவை 20-ஆம் தேதி வரை மட்டுமே மலர்கண்காட்சி நடத்துவதென தோட்டக்கலை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு அங்கு மேலும் 6 நாட்களுக்கு மலர்கண்காட்சி நீட்டிக்கப்பட்டது. 


இந்த நிலையில் ஊட்டி மலர்கண்காட்சி கடந்த   26-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூருகையில், ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் 17 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மலர் கண்காட்சியை இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். இருந்த போதிலும் மலர்கண்காட்சியை பார்வையிடுவதற்காக பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளதால் அங்கு மேலும் சில நாட்கள் மலர் அலங்காரங்களை வைக்க திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad