உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க்காட்சியினை முன்னிட்டு, பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க்காட்சியினை முன்னிட்டு, பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

 



நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க்காட்சியினை முன்னிட்டு, பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.05.2024) தொடங்கி வைத்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

நீலகிரி மாவட்டத்தில், உதகை மலர்க்காட்சி மே 10ம் தேதி மே முதல் 20ம்தேதி வரையிலும், ரோஜா காட்சி மே 10ம் தேதி முதல் மே 19ம் தேதி வரையிலும்,பழக்காட்சி மே 24 தேதி முதல் மே 26 தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதில் 11 நாட்கள் நடைபெறும் 126-வது மலர்க்காட்சி வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


இவ்வாண்டு சிறப்பம்சமாக 35,000 மலர்த்தொட்டிகள் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி,சைக்லமன் மற்றும் பல புதிய இரக ஆர்னமென்டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்காமேரிகோல்டு, பிகோனியா, கேன்டிடப்ட், பிரன்ச்மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக்,வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், டயான்தஸ், ஆஸ்டர் பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற  75 இனங்களில் 388 வகையான இரகங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 6.5 இலட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காட்சியளிக்கிறது.இவ்வாண்டு மலர்க்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்காவில் சுமார் 10,000 பல வகையான வண்ண மலர்த்தொட்டி அலங்காரங்கள் காண்போருக்கு குளிர்ச்சி தரும் வகையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள 126வது மலர்க்காட்சியில் சிறப்பம்சமாக 10.05.2024 மற்றும் 20.05.2024 ஆகிய இரண்டு நாட்களில் லேசர் லைட் ஷோ காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி.ஷிபிலா மேரி, துணைஇயக்குநர் திருமதி.அப்ரோஸ் பேகம், உதவி இயக்குநர்கள் திரு.பாலசந்தர்,திருமதி.ஜெயலட்சுமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு 


No comments:

Post a Comment

Post Top Ad