மே1முதல் 31 வரை நீலகிரியில் ஒருவழிபாதை தொடங்கியது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

மே1முதல் 31 வரை நீலகிரியில் ஒருவழிபாதை தொடங்கியது.

 



கோடை விடுமுறை மற்றும் சமவெளியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் ஆகிய காரணங்களால் நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மே மாதம் முழுவதும் ஒருவழிப்பாதையாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டு இன்று அமல்படுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக உதகை செல்லவேண்டும் , கோத்தகிரியில் இருந்து உதகை ‌செல்லும் வாகனங்கள் கடடபெட்டு பகுதியில் இருந்து குன்னூர் வழியாக உதகை செல்ல வேண்டும், உதகையில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.

ஒருவழிபாதையாக அமல்படுத்தியதால் ஏற்கனவே பார்க்கிங் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் சிறிய இடமான கோத்தகிரியில் அதிக அளவு வாகனங்கள் வந்ததால் வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கிறது கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையினர் ஊர்க்காவல் படையுடன் இணைந்து வாகன நெரிசல் ஏற்படாமல் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இன்னும் ஒருமாத காலத்திற்கு உள்ளூர் மக்களின் பாடு மிகவும் திண்டாட்டம் தான்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad