ஊட்டிக்கு வராதீங்க இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 April 2024

ஊட்டிக்கு வராதீங்க இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்.

 


நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி என போற்றப்படுகிறது.இயற்கையாக உள்ள மலை நீர்வீழ்ச்சி பசுமை காடுகளால் இதமான காலநிலை சுத்தமான காற்று வனம் சூழ்ந்த இடத்தில் பல்லுயிர்களின் வாழ்விடம் என சிறப்புடன் இருந்தது.

கோடையில் சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை காரணத்தினாலும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் வருகின்றனர் அரசும் மாவட்ட நிர்வாகமும் கோடை விழாவை நடத்தி சுற்றுலா பயணிகளுக்கு  மகிழ்ச்சி அளிக்கிறது.

காலப்போக்கில் அனுமதியில்லாத கட்டுமானம் மரங்களை அழித்தது புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு இதுவரை கோடை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வறண்டதால் மின் உற்பத்தி நிறுத்தம்  நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றதால் உதகை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சமவெளிபகுதி அளவிற்கு வெப்பம் பதிவானது ஆகிய காரணங்களால் நீலகிரி மாவட்டம் முழுவதும் வறண்டு பாலைவனம் போல் உள்ளது.  நீலகிரி மாவட்டமே அழியும் நிலையில் உள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் எவ்வளவு தடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது ஆகிய காரணங்களால் கோர்ட் தலையிட்டு அதிக வாகன நெரிசல் காற்று மாசுபாடு ஆகிய காரணங்களுக்காக மே மாதம் 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்று தினசரி குறிப்பிட்ட அளவு வாகனங்கள் வரும் அளவிற்கு கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆகையால் இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் உள்ள நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக  குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad