உதகை Lawrence பள்ளியில், எல்ஷடாய் சிலம்பப் பள்ளி மற்றும் களரி மாணவர்கள், செயல் விளக்கம் (Demonstration) செய்து காட்டினர். தேசியச் சிலம்பப் பதக்கம் வென்ற Heavy Weight Champion, Grandmaster திரு. சு. விஜய் பாபு MA, BL அவர்களிடம் பயிற்சி பெறும் சிலம்பாட்ட மாணவர்கள், சிலம்பாட்டதின் பரிணாம வளர்ச்சியைச் சங்க காலம் - இடைக் காலம் - நவீன காலம் என்று, ஆதி மனிதன் காலம் முதல் தற்காலம் வரையிலான பரிணாம வளர்ச்சியை அரிதாரமிட்டுச் செய்து காட்டினர்.
நெடுங்கம்பு, நடுக்கம்பு, இரட்டைக்கம்பு, மான் கொம்பு, சுருள் வாள், அலங்காரச் சிலம்பம், போர்ச்சிலம்பம் மற்றும் வாள்வீச்சுச் செயல்முறை நுணுக்கங்களை விளக்கினர்.
களரி - தேசிய வீரர்கள் மற்றும் ஆசான்களுமான S. Surendar, M. Suresh மற்றும் T. Ajith Kumar ஆகியோர், குரு வணக்கச் சுவடு, நிலைச் சுவடு, பிரிவுச் சுவடு, சீன அடிச் சுவடு, அடிமுறை, சிரமம் மற்றும் வாள் வீச்சுச் செயல் முறை விளக்கங்களைச் செய்து காட்டினர்
தேசிய மற்றும் மாநிலச் சிலம்பப் பதக்கம் வென்ற S. Suresh Raja (Master), A. Barathkumar (Instructor), N. Swetha (Instructor), Y. Deepakraj, மற்றும் ஒருங்கிணைப்பாளர் P. Dhayaneswaran ஆகியோர் செயல் முறை விளக்கத்தில் பங்கேற்றனர்.
மொத்தம் 35 வீரர்கள் செய்த இந்தச் செயல்முறை விளக்கம், Lawrence பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது. பள்ளியின் Headmaster, Dean of Activities மற்றும் Physical Director ஆகியோர், செயல் விளக்கம் காண்பித்த அனைவர்க்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
No comments:
Post a Comment