நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தின் டவர் கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்து பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை நீலகிரி மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவிப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 April 2024

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தின் டவர் கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்து பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை நீலகிரி மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவிப்பு...

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தின் டவர் கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்து பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை நீலகிரி மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவிப்பு...


நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு கடந்த 2018 ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனம் மூலம் செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.இதை முன்னாள் மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு எடுத்துச்சென்று டவர் கோபுரம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில்,கடந்த 2023 ம் ஆண்டு மீண்டும் தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் டவர் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கியதாக கூறி டவர் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனை கண்டித்து கேர்பெட்டா ஊர் சார்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தும்,பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது சம்மந்தமாக பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில்,இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கேர்பெட்டா ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதுச்மமந்தமாக ஊர் மக்கள் தெரிவிக்கையில் எங்கள் ஊரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம்.இந்த நிலையில் பள்ளி குழந்தைகள்,வயது முதிர்ந்தோர்,நோய் பாதிப்பு ஏற்ப்பட்டு அதிக அளவில் உள்ளனர்.ஊரின் நடு பகுதியில் இந்த செல்போன் டவர் கோபுரம் அமைப்பதால் ஊரில் வசித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது‌.எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனே ஊரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் செல்போன் கோபுரம் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad