உங்கள் உயிர் உங்கள் நிதானத்தில் இன்று 9.4.2024 செவ்வாய்க்கிழமை காலையில் நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனைக்கு முன்னால் படு வேகமாக ஒன்றை ஒன்று முந்தி சென்று கொண்டிருந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி உரசி ஒடுங்கியது நல் வாய்ப்பாக யாருக்கும் எந்த ஒரு சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை எனவே கரணம் தப்பினால் மரணம் மரணம் மட்டுமல்ல சிறு கவனம் சிதறினால் கூட பெரும் விபத்துகளும் மரணங்களும் தான் நேரிடும் எனவே தங்களை நம்பி இருக்கிறவர்களை நினைவில் கொண்டு வாகனங்களை நிதானமாக இயக்க வேண்டுமாய் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத் தளசெய்தி பிரிவின் மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக. உதகை தாலுக்கா செய்தியாளர் விஜயராஜ்.
No comments:
Post a Comment